★ புதுக்கோட்டையின் வரலாறு தென்னகத்தின் வரலாற்றின் ஓர் அம்சமாக இருக்கிறது. மிகப் பழமையான வரலாற்றுப் பதிவுகள் கொண்ட பூமி இது ★ அதிக எண்ணிக்கையில் குகைக்கோயில்கள்,ஆயிரத்திற்க்கு மேற்பட்ட கல்வெட்டுகள், அதிகமான தொல்லியல் பழமைச் சின்னங்கள், அதிகமான ரோம பொன்நானயங்கள் கிடைத்துள்ள இடமென பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை ★
அருள்மிகு ராங்கியம் கருப்பண்ண சுவாமி கோயில் -- ராங்கியம்
அருள்மிகு கருப்பண்ண சுவாமி கோயில் -- ராங்கியம்
செல்லும் வழி

அருள்மிகு ராங்கியம் கருப்பண்ண சுவாமி கோயில் ராங்கியம் உறங்காப்புளி - 622 409 புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை -மதுரை ரோட்டில் திருமயத்தில் இருந்து 10 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது.

கோயில் பெருமைகள்

இங்குள்ள முன்னோடி மற்றும் சப்பாணி ஆகியோர் ஒருவருக்கு யார் கெடுதல் செய்தார்களோ, அவர்களை திருப்பித்தாக்க தயங்க மாட்டார்கள். இவர்களது சன்னதியின் முன்பு எரிக்கப்பட்ட விறகு கட்டைகளின் சாம்பல் இருக்கிறது. இதை பூசிக் கொண்டு, வீட்டிற்கும் சிறிதளவு எடுத்து வந்து பூஜையறையில் மனச் சுத்தியுடன் வைத்து விட்டால் எப்பேர்பட்ட பிரச்னையும் தீரும். கடன் விவகாரத்தில் ஏமாற்றியவர்கள், பெண்களை ஏமாற்றுபவர்கள் ஆகியோரை கடுமையாகத் தண்டிப்பார்கள்.

இவர்களது அரசாங்கத்தில் மன்னிப்பு' என்ற வார்த்தைக்கே இடமில்லை. இவர்களை வணங்கி விட்டு, சட்டென திரும்பக்கூடாது. பத்தடி பின்னால் வந்து தான் திரும்ப வேண்டும். இந்த சன்னதிக்குள் நின்று சத்தம் போடக்கூடாது. வம்பு பேசக்கூடாது. பொய் சொல்லக்கூடாது. பெண்கள் சன்னதிக்குள் செல்ல அனுமதி இல்லை. ஆனால், வெளியில் நின்று வணங்கலாம்

இங்குள்ள அகோர வீரபத்திரரை வழிபட்டால் பீடைகள், தீவினைகள், தோஷங்கள் பறந்தோடி விடும். இங்குள்ள முன்னோடி மற்றும் சப்பாணி ஆகியோர் ஒருவருக்கு யார் கெடுதல் செய்தார்களோ, அவர்களை திருப்பித்தாக்க தயங்க மாட்டார்கள். இவர்களது சன்னதியின் முன்பு எரிக்கப்பட்ட விறகு கட்டைகளின் சாம்பல் இருக்கிறது. இதை பூசிக் கொண்டு, வீட்டிற்கும் சிறிதளவு எடுத்து வந்து பூஜையறையில் மனச் சுத்தியுடன் வைத்து விட்டால் எப்பேர்பட்ட பிரச்னையும் தீரும்.

கடன் விவகாரத்தில் ஏமாற்றியவர்கள், பெண்களை ஏமாற்றுபவர்கள் ஆகியோரை கடுமையாகத் தண்டிப்பார்கள். இவர்களது அரசாங்கத்தில் மன்னிப்பு' என்ற வார்த்தைக்கே இடமில்லை. இவர்களை வணங்கி விட்டு, சட்டென திரும்பக்கூடாது. பத்தடி பின்னால் வந்து தான் திரும்ப வேண்டும். இந்த சன்னதிக்குள் நின்று சத்தம் போடக்கூடாது. வம்பு பேசக்கூடாது. பொய் சொல்லக்கூடாது. பெண்கள் சன்னதிக்குள் செல்ல அனுமதி இல்லை. ஆனால், வெளியில் நின்று வணங்கலாம்

இந்தக் கோயிலின் நுழைவு வாயிலில் பிரம்மாண்டமான குதிரை சிலைகளுக்கு நடுவில் ஒருபுறம் ஆஞ்சநேயரும், மறுபுறம் கருடனும் காவல் செய்கின்றனர். தேவதாசி ஒருத்தி நடனமாடும் சிலையும், வானரப்படைகளின் உருவமும் வடிக்கப்பட்டுள்ளது. பார்வதியின் தந்தை தட்சன், பிராஜன் என்ற பெயரில் ஆடுமுகம் கொண்டு இங்கு அருள்பாலிக்கிறார். துந்துபி எனப்படும் மாடு முகம் கொண்ட இசைக்கலைஞர் இங்கு உள்ளார். இவரது மனைவி துந்துமி, முன்னோடியின் சன்னதியின் முன்பு காட்சி தருகிறாள். இங்கு முத்திலே பிறந்து, முத்திலே வளர்ந்த ஆறுகரம் கொண்ட முத்துராக்கு அம்மனும் அருள்பாலிக்கிறாள். இவளுக்கு சூல் ஆடு குத்தி வழிபாடு நடக்கிறது. இங்குள்ள அகோர வீரபத்திரரை வழிபட்டால் பீடைகள், தீவினைகள், தோஷங்கள் பறந்தோடி விடும். அமர்ந்த நிலையிலுள்ள கருப்பசுவாமியை காண்பது அரிது. இங்கே கருப்பசுவாமி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். அவரருகே ஆஞ்சநேயர் காட்சி தருவது மற்றொரு சிறப்பு. ஏகம்மன், அரசப்பன், சஞ்சீவி பண்டாரம் ஆகியோருடன் மூலவராக அருள்பாலிப்பது அங்காள பரமேஸ்வரி அம்மன்.

சிறப்புகள்

ராமபிரான் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி திரும்பும் போது, பலரைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷங்களும் பின் தொடர்ந்தன. அவர் செல்லும் வழியில் ஒரு புளியமரத்தின் அடியில் தங்கினார். அந்தமரம் இரவு வேளையிலும் உறங்காமல் இருந்து அவரை பாதுகாத்தது. எனவே இந்த மரம் உறங்காப்புளி' எனப்பட்டது.

இங்குள்ள "உறங்காப்புளி' எனப்படும் புளியமரத்தின் இலைகள் இரவு நேரத்தில் மூடுவதில்லை. விரிந்த நிலையிலேயே இருக்கும்.

 

Photo Gallery


புதுக்கோட்டை மாவட்ட கோயில்
அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில், திருக்கோவர்ணம், புதுக்கோட்டை
அருள்மிகு சாந்தநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு புவனேஸ்வரி திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில், திருவரங்குளம், புதுக்கோட்டை
அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில், ஆவுடையார்கோயில்
அருள்மிகு அய்யனார் திருக்கோயில்,, பனங்குளம், புதுக்கோட்டை.
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், குமரமலை, புதுக்கோட்டை
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், கண்ணனுார், புதுக்கோட்டை
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், தபசுமலை, புதுக்கோட்டை
அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில், செவலூர், புதுக்கோட்டை
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், தொண்டைமான் நல்லூர், புதுக்கோட்டை
அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில், நேமம், புதுக்கோட்டை
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், நெடுங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில், மீமிசல், புதுக்கோட்டை
அருள்மிகு கருப்பண்ண சுவாமி திருக்கோயில், ராங்கியம் உறங்காப்புளி, புதுக்கோட்டை
அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கொன்னையூர், புதுக்கோட்டை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மூலங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அரிமளம், புதுக்கோட்டை
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பேரையூர், புதுக்கோட்டை
அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில், வேந்தன்பட்டி, புதுக்கோட்டை
அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், மலையடிப்பட்டி, புதுக்கோட்டை
அருள்மிகு சத்திய கிரீஸ்வரர் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை
அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை
அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில், விராலிமலை, புதுக்கோட்டை
அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில், குடுமியான்மலை, புதுக்கோட்டை
அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் கோயில், திருமணஞ்சேரி, புதுக்கோட்டை
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேங்கைவாசல், புதுக்கோட்டை
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவப்பூர், புதுக்கோட்டை
அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், நார்த்தாமலை, புதுக்கோட்டை
அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் - மலையக்கோயில புதுக்கோட்டை